Saturday, November 14, 2009

Parama Nantham has invited you to Tubely


Add Friend Request from Tubely.com for Parama4u Parama Nantham wants to be your friend

Parama4u
Online Status 22/M/
India India
Do you want to add Parama Nantham to your friends network ?
 
Click here to accept Parama4u as a friend
Accept
   Click here to reject friend request
Reject
Privacy Policy  Unsubscribe  Terms and Conditions

Monday, June 29, 2009

செல்லமடி நீ எனக்கு! (1)

நெருங்கி அமர்ந்தபடி
"ஒரு கவிதை சொல்" என்றாய்
கள்ளப் பார்வையுடன் முத்தத்தை பரிசளித்தேன்
"இதுவரை எழுதியதில் இதுதான் ரொம்ப பிடித்தது" -நீ 
"இன்னொன்று எழுதட்டுமா? கொஞ்சம் பெரிதாய்?"
o
"ஏன் காதல்ர்கள்ள பையனோட வயசு எப்பவும் அதிகமா இருக்கு?" -நீ    
"தேவதைய பாக்குற அவசரத்துல பசங்க சீக்கிரம் பொறக்குறாங்க .. அவங்கள காக்க வைக்கிறதுல பொண்ணுங்களுக்கு அப்படி ஒரு சந்தோசம்" -நான்
"நான்தான் உன்ன காக்க வைக்காம மூணே மாசத்துல வந்துட்டேன்ல"
o
"டேய்! நானும் கவிதை எழுதனும்னு ஆசைப் படறேன்டா!"
"எழுது..நான் உனக்கு உதவி பண்றேன்"
"சரி ஒரு கவிதை எப்படி இருக்கணும்"
"21 வயசுல 52 கிலோவில உன் உயரத்துல உன்ன மாதிரி இருக்கணும்"
"அடப் பாவி..அப்போ நீ உதவின்னு சொன்னது எத?"
o
"டேய்! டக்குனு ஒரு கவிதை சொல்லு"
"அப்படில்லாம் சொல்ல முடியாதுடி.. கவிதை உன்னோட வெக்கம் மாதிரி அதுவா வரணும்"
"எனக்கு வெக்கம் அதுவாவா வருது? நீதான் எதாவது பண்ற!"
"அப்போ எனக்கு கவிதை வர்ற மாதிரி நீயும் எதாவது பண்ணு"  
{……….}
"எனைக் கவி என்கிறாய்     
எல்லா அழகிய கவிதைகளையும்
நீதான் மென்மையாய் எழுதுகிறாய்
என் இதழ்களில்"    
o
உன் முத்தங்கள் எனக்கான
குட்டிக் கவிதைகள்
என் கவிதைகள்
உனக்கான
குட்டி குட்டி முத்தங்கள்
o

 தொடரும்…

Thursday, May 21, 2009

உயிருடன் உள்ளார் பிரபாகரன்! - நக்கீரன் கட்டுரை!

Monday, May 18, 2009

ஈழம் - ஒரு கருமம் புடிச்சவனும் சில வழக்கங்களும்!

தனி ஈழ முகமூடியொன்று
வழக்கம்போல்
மலை முகட்டின்
வாசலில் கிடந்தது

உண்ணாவிரத மேடைஒன்றில்
வழக்கம்போல்
கொஞ்சம் பிரியாணி
சிதறி இருந்தது

நெஞ்சடித்து அழுதவனின்
மார்புக்குள் இறங்கிக் கொண்டிருந்தது
வழக்கம்போல்
அடுத்த நாட்டின்
சோம பானம்

சகோதரனுக்காய் சகோதரி
பெற்றவனொருவன்
வழக்கம்போல்
பதநீர் குடித்துக் கொண்டிருந்தான்

முன்னோர்கள் போலிருந்தவன்
முகமூடி கழற்றிவிட்டு
விக் அணிந்து
வழக்கம்போல்
நடிக்கப் போய்விட்டான்
 
வழக்கம்போல் 
என் சகோதரனை குறிவுடைத்து
என் சகோதரி யோநி கிழித்து
வழக்கம்போல் விளையாடிக் கொண்டிருக்கிறது
மகிழும் ராஜ பக்ஷி 

வழக்கம்போல் கண்ணீரைத் துடைத்தபடி
இதை எழுதிக் கொண்டிருக்கிறான் 
கையாலாகாத ஒரு கருமம் புடிச்சவன்! 

Wednesday, May 6, 2009

பசங்க படமும் பத்து உள்குத்துகளும்

லாங்

ஷாட்.

கருப்புப்

பின்ணனியில் அதிகாலைச் சூரியன். ஒரு பாலம்.ரயில்சத்தமாய் பின்ணனி இசை. இருக்கையில் கொஞ்சம் சாய்ந்து அம்ர்ந்தேன். ரயில் வரப் போகிறது, ஒரு இளைஞன் அமர்திருப்பான். ஜன்னல் வழியே சோகமாய் பார்ப்பான். ஜன்னலின் வழியே தொலைவில் சிறுவயது காலத்தைப் பார்க்கப் போகிறான் எனக் காத்திருந்தேன்.

திரையில்

பாலத்தின் மேல் இருபது குழந்தைகள் ரயில் வண்டி விளையாடிக் கொண்டே ஓடி வர,பின்னால் ஓடி வருகிறது "பசங்க" எனும் எழுத்து.

எப்பல்லாம்

பழக்கப் பட்ட Scene க்காக சாய்ந்து உக்கார்ரமோ அப்பல்லாம் நிமிர்ந்து உக்காரக் செய்கிறது திரைக் கதை.ஏப்ரல் 2008ல் தொடங்குகிறது கதை.

திருமயம்

பக்கத்தில் விராச்சிமலை கிராமம். போலிஸ் ஸ்டேஷன்.ஊர் பெரியவர்கள் மூன்று பேர் புகார் கொடுக்கின்றனர்.ஜீவன் நித்யானந்தம் எனும் அதி பயங்கர குற்றவாளி மற்றும் அவனது இரண்டு கூட்டாளிகள் பற்றி. அவர்கள் செய்த குற்றம்? திருஷ்டிப் பொம்மையின் தலை (பானையை) உண்டி வில்லால் உடைத்தது, காலையில் வாசலில் மாட்டியிருக்கும் பால் பாக்கட்- திருடிக் குடித்தது மற்றும் இன்னும் பல சுவாரஸ்யமான சிறுபிள்ளைக் குற்றங்கள். (இந்த பத்தியின் முதலில் வந்திருக்க வேண்டிய முன் குறிப்பு, அவர்கள் மூவரும் 11,12 வயது சிறுவர்கள்.)

சிறுவர்கள்

பார்வையில் பெரியவர்கள் உலகத்தை சொல்லும் வெகுஜன (தமிழ்) சினிமா அஞ்சலிக்கு பிறகு இதுவாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன்.

::::

திரைக்கதை::::

இந்த

சிறுவர்களை அடக்க யாருமில்லயா என (தமிழ் சினிமா வழக்கப் படி) பெரியவர்கள் கேட்க,(தமிழ் சினிமா வழக்கப் படி) "Introduction Song"

"

கல்லும் முள்ளும் இவன் சாலை

எண்ணும்

எழுத்துமே வேலை

எதிரிகள்

யாரும் இல்லை

எதிர்த்து

ஜெயித்ததில்லை

Who's that Guy?"

(

இதுதான் தற்போதைய என்னுடைய Ringtone ;) )

அசத்தலாய்

அறிமுகம் ஹீரோ! மற்றுமொரு 11 வயது சிறுவன்..! வரிக்கு வரி ஹீரோவுக்கு பல்வேறு கெட்டப்புகள். இதுவரை ஹிட்டடித்த பல்வேறு ஹீரோக்களை வம்புக் கிழுக்கிறார்கள். நான் கடவுள் விமர்சனத்தில் சாரு நிவேதிதா இப்படி சொல்லியிருப்பார்

"

படம் முழுக்க தற்போதைய தமிழ் சினிமாவை எள்ளி நகையாடி இருக்கிறார்கள்.சினிமாவுக்குள்ளிருந்து கொண்டே சுய விமர்சனம் செய்து கொள்ள அசாத்திய துணிச்சல் வேண்டும்.பாலாவைத் தவிர மற்றவருக்கு இந்த தைரியம் வருமா என்பது சந்தேகமே". 'பசங்க' பாண்டிய ராஜுக்கு இந்த துணிச்சல் இருக்கிறது. பல இடங்களில் தற்போதய சினிமாவை, சினிமா இலக்கணத்தைக் கிழித்திருக்கிறார்கள். சின்ன சின்ன வசனங்களில்

1.

(

சிறுவன் (ஹீரோ?) குடும்ப உறுப்பினர்கள் பற்றி சொல்கையில் சித்தப்பா பற்றி சொன்னதும்) பாக்க சுமாரா இருக்கானே இவன்தான் ஹீரோன்னு நினைச்சிடாதீங்க. எப்பவுமே நான்தான் ஹீரோ.. அதுக்காக நான் வளந்து பெரியவனாகி சண்ட போட்டு காதலிப்பேன்னும் நினைக்காதீங்க.படம் முடியற வரைக்கும் நாங்க இப்படியே தான் இருப்போம்.

2.

(

வில்லச் சிறுவனின் கூட்டாளி இறுதிக்கு முந்தய காட்சியில்) , "எங்கம்மா அப்ப்வே சொல்லுச்சு...வில்லன் கூட சேராதே, Climax திருந்திடுவான்னு"

தல

,தலைவர்,தளபதி,கேப்டன்,புரட்சி மற்றும் பல நடிகர்களுக்கான சாட்டையடியை திரையில் காண்க!

ஹீரோ

அறிமுகத்தில் தொடங்கும் குழந்தை விளையாட்டு, படம் முழுக்க துள்ளத் துடிக்க விருந்து படைக்கிறது. பல இடங்களில் அப்துல்கலாமின் "கனவு காணுங்கள்" வசனத்தை காட்சிப் படுத்தியிருக்கிறார்கள். சுவாரஸ்யமாகவே.

 

படம்

முழுவதும் குறிகளாலும்,குறியீடுகளாலும் நிரம்பி இருக்கிறது.

உள்குத்து

1:

ஒரு சிறுவன்

. கடந்த அஞ்சு வருசமா கிளாஸ் லீடர். ஊர்ல யாருக்கும் பிடிக்கலயாம். போலீஸ்ட்ட போய் சொல்றாங்க. அவங்கள Arrest பண்ண எங்களுக்குத்தான் பிரச்சினைன்னு போலீஸ் சொல்லிடுது.

உள்குத்து

2:

'கிட்டத்தட்ட வில்லன்' சிறுவனோட பெயர் 'ஜீவன் நித்யானந்தம் C.M'

'கிட்டத்தட்ட ஹீரோ' சிறுவனோட பெயர் 'அன்புக்கரசு I.A.S'

உள்குத்து

3:

இரண்டு பசங்க

.பக்கத்து பக்கத்து வீடு. ஒருத்தனோட தங்கச்சிய இன்னொருத்தன் அடிச்சிடுறான். தட்டிக் கேட்கவேண்டிய சித்தப்பன கேட்டா சின்னப் பசங்க விவகாரத்துல நான் தலையிட முடியாதுன்னு ஒதுங்கிகிறான். காரணம் அடிச்சவனோட அக்கா சித்தப்பனோட காதலி.

உள்குத்து

4:

ஒரு பையனோட அப்பாவ இன்னொரு பையன் கிண்டல் பண்றான்

. அவங்க ரெண்டு பெரும் அடிச்சுக்க ஆரம்பிச்ச்சு ஆதரவு,எதிர் கோஷ்ட்டினு ஸ்கூல் மொத்தமும் அடிச்சுக்குது. எல்லோரும் தேசிய கீதம் கேட்டா மட்டும் எழுந்து நிக்கிறாங்க.

தலைமைஆசிரியர் வந்து எல்லாரையும் உன்னால நான் கெட்டேன் என்னால நீ கெட்டேன்னு சொல்லிகிட்டே தோப்புகரணம் போடா சொல்றாரு

. (இதோட உண்மை அர்த்தத்த விளக்குற வசனம் படத்துல இருக்கு)

உள்குத்து

5:

"கிட்டத்தட்ட ஹீரோ" சிறுவனை லீடர் பதவியில இருந்து இறக்க கொஞ்சம் சாக்பீஸ அவன் பையில "வில்லன் குரூப்" பசங்களே போட்டு மாட்டி விட முயற்சி பண்றாங்க.

உள்குத்து

6:

'

கிட்டத்தட்ட ஹீரோ' சிறுவன் வேற ஸ்கூல்ல சேர்ந்தவன். அவன் மாணவர் லீடருக்கான தேர்ல்தல்ல நிக்கும்போது யாருமே ஆதரிக்கல. அந்த மாணவனுக்கு நெருக்கமான ஒரு பெண் தன் சகாக்களிடம் பரிந்துரை செய்து அவனை ஜெயிக்க வைக்கிறாள்.

உள்குத்து

7:

'கிட்டத்தட்ட ஹீரோ' சிறுவனுக்கு கைத்தட்டல் ஊக்கம் கொடுக்கிறது. 'கிட்டத்தட்ட வில்லன்' சிறுவன் பேனா உள்ளிட்ட பரிசுகளில் மயங்குகிறான்.

உள்குத்து

8:

ஹீரோ சிறுவன் அறிமுகத்தில் வெள்ளை நிறச் சட்டையும் வருவரை நிற்கும் சிகப்பு நிற

"டை" உடன் வருகிறான்

உள்குத்து

9:

எல்லோரும் திருந்தி ஒன்று சேரும் இடத்தில் கடைக்குட்டித் தம்பி மறுபடியும் தொடங்கி வைக்கிறான்

.

உள்குத்து

10:

அந்த கிளாஸ் லீடர் அமைதியா இருந்தாலும் அவன தப்பு செய்ய சொல்லி தூண்டுறது வலது பக்கத்துல இருக்கிற ஒரு பையன்

. அவன் கூட எப்பவும் குண்டா ஒரு பையனும் ஒல்லியா கண்ணாடி போட்ட ஒரு பையனும் இருக்காங்க

:::::

ஒளிப்பதிவு::::

கரும்

பின்ணியில் அதிகாலைச் சூரியனுக்கு எதிராக குழந்தைகள் ஓடிவருவதில் தொடங்கி ஒவ்வொரு மாதத்திற்கும் சீதோஷ்ண நிலைக் கேற்ற வண்ணம்...அப்பா அம்மா சண்டையில் குழந்தையில் பார்வையில் வெறுமை கருப்பு-வெள்ளை, உருக்கமாய் குழந்தைகள் வேண்டுகையில் கோயில் மஞ்சள், சர்ச் வெண்மை, மசூதிப் பச்சையென பின்னிப் பெடலெடுக்கிறது கேமரா!

::::

இசை::::::

"

இருபத்தைந்தைந்து வருடங்களுக்கு முன்னால், அன்னக்கிளி இசை வெளியீட்டு விழாவில் இசை சுத்தமாய் பிடிக்காத போதும் சொன்னேன். இந்த இளைஞர் இன்னும் இருபது வருடங்களுக்கு தமிழ் சினிமாவை இசையால் கட்டி இழுக்கப் போகிறார் என்று.. அது நடந்தது. அதுதான் பசங்க படத்தின் ஜேம்ஸ் வசந்தனுக்கும்! " சொன்னவர் சாரு நிவேதிதா. இதைக் கேட்டுதான் இந்த படத்தைப் பார்க்க வேண்டும் எனத் தோன்றியது, சாரு பொய் சொல்லவில்லை. ஜேம்ஸ் வசந்தன் ஏமாற்றவில்லை! அருமைய்யாஆஆஆஆஆஆ!

"

ஒரு வெக்கம் வருதே! வருதே!" - காதலிக்கும்,காதலிக்க விரும்பும் எல்லோரின் (குறிப்பாய் பெண்களின்) Caller Tune/ Ring Tone

"

அன்பாலே அழகாகும் வீடு" - மனைவி குழந்தைகளுடன் குதூகலிக்கும் அங்கிள்களின்,நற்கணவர்களின் சங்கத்தை சேர்ந்தவர்களின், சேர போகிறவர்களின் Caller Tune/ RIngtone ;)

"

கல்லும் முள்ளும் இவன் சாலை" - இளைஞர்களின், என்னைப்போன்ற மீசைவைத்த குழந்தைகளின் Caller Tune/RingTone

 

:::::::

பசங்க::::::

காற்றைப்

புணரும் நடனங்கள் - கிடையாது!

காதைகிழிக்கும்

குத்துப் பாட்டு - கிடையாது!

குடும்பத்துடன்

போய் பார்த்தால் நெளிய வைக்கும் காட்சியமைப்புகள் கிடையாது

சிரிக்க

-ஏராளம்

சிந்திக்க

-ஏராளம்

ரசிக்க

வைக்கும் காதல் -ஏராளம்

கண்ணீர்

துளிக்கும் வசனஙகள் - ஏராளம்

(

கவனித்துப் புரிந்து கொண்டால்) சமகாலத்து அரசியல்,சினிமா விமர்சனம் -ஏராளம்

குழந்தைகளுக்கான

படம்..பெரியவர்களுக்கான பாடம்!

Monday, May 4, 2009

உடையும் கண்ணாடிகளுக்கு உள்ளிருந்து…

கையில் புழங்கும் பணம்
பற்றியதொரு பெருமதிப்பில்
துரத்திப் பிடித்ததொரு இளமை
சுமைஎனக் கூடும்
அதே பெருமதிப்பில்
கையில் புழங்கும் பணம்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
காதல், பொழுது தின்னும் பாம்பு எனக்கும்
காதல், கவிதைகளால் தின்னப்படும் தாள் எனக்கும்
காதல், பூந்தோட்டங்களில் ஒரு பூ சுற்றும் முட்டாள்தனம் எனக்கும்
காதல், மரணம் விளிம்பிலிருந்து தள்ளும் விஷம் எனக்கும்
காதலுக்கான உங்கள் விதிமுறைகள் எனக்கும் பொருந்தும்
நான் காதலிக்கத்த் தொடங்கியதின் முந்தய நொடி வரை
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
எனக்கான முகங்கள்
யாரும் பார்த்தறியாதது
எனக்கான சிலுவைகள்
யாரும் சுமந்தறியாதது
எனக்கான எல்லாம்
எனக்காகவே படைக்கப் பட்டிருக்கிறது
எங்கேவெனத் தெரியாத
எனக்கான ஒரு இடத்தில்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
திடுக்கிட்டு எழுந்த தூக்கத்தின் இரவில்
எனை எழுப்பிவிட்ட கனவில்
ரத்தம் தெறித்து செத்துக் கொண்டிருந்த
சகோதரனின் அருகிலிருந்தபடி
எழுதிக் கொண்டிருந்த கவிதையின் முதல்வரி
"காதலெனப்படுவது யாதெனில்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
எப்போதும் வெறுமையாய் நிறைகிறது
பின்னூட்டங்களுக்கான களம்
காமம் பற்றிய கவிதைகளின் பதிவில்
வாசித்தவர் வசித்தவர்
யாருக்கு முடியும் பொதுமையில்
எனக்குப் பிடித்தது அதுவெனப் பதிய?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Saturday, May 2, 2009

மரியாதை கெட்ரும்-ஒரு கலந்துரையாடல் :P

"டேய் ஆனந்து"  கூப்பிட்டது மாமா பையன் 12 வயது.
"டேய் நான் உன்ன விட பத்து  வயசு பெரியவண்டா! வாடா போடானுலாம் சொல்லக் கூடாது"
"ஏன்? நான் கூடத்தான் உன்ன விட 10 வயசு சின்னவன்.. என்ன மட்டும் நீ வாடா போடானு பேசுற?"
"…….."
"சரி ஒரு நல்ல புதுப் பட கதையா சொல்லு"

"பொள்ளாச்சி பக்கத்து கிராமத்துல ஒரு பணக்கார அப்பாவாம். வில்லு வண்டியில வருவாரு. கிரே கலர்ல கேவலமா ஒரு சட்டை போட்றுப்பாரு.   ஊர்க்காரன்கல்லாம் வேலை வெட்டிய விட்டுட்டு அவருக்கு வணக்கம் சொல்லுவாங்க.   அவரு பையன அவன் விரும்புற மாதிரியே வளப்பராம். இடைல ஒரு பொண்ண அந்த பையன் காதலிப்பானாம்.   அந்த பொண்ணு இவன் பட்டிக்காடுங்கிறதால இவன விட்டுட்டு இன்னொருத்தன் கூட போய்டும். இவரு சொத்தில்லாம நடுத் தெருவில நிப்பாரு. அப்ப இன்னொரு பொண்ணு வரும். இவரையும் நம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்பி, காதலிச்சு கல்யாணம் பண்ணி ஐடியா குடுத்து ஒரு பாட்டுல பெரிய ஆள் ஆகி பழைய சொத்தெல்லாம் ஒரே வாரத்துல வாங்கிடுவாங்க, இவர வெறுத்துட்டு போன பொண்ணு,இவர் கூட சண்ட போட்ட வில்லன்,ஹீரோக்கு சோறு போடாத ஆயா எல்லாருமே திருந்தி சுபம்"

ஏன்டா மண்டையா.. சூர்யவம்சம் கதைய புதுப்படம்னு என்கிட்டே வந்து ஓட்டுன, உன் ரீல் அந்துபோகும்

இல்லைப்பா… நிஜமாவே மக்கள் கூட கூட்டணி வச்ச தலைவரு டெபாசிட் போன பழைய நடிகைகூட கூட்டணி வச்சு நடிச்ச படம்பா.. பாரு அந்த பாட்ட மொபைல்ல  போடறேன்..  

"ஆனந்தம்,ஆனந்தம், இதுதான் ஆனந்தம்.."

டேய் இது பிரியமான தோழி.. "சந்தோசம் சந்தோசம் வாழ்க்கையில் பாதி பலம்"  ரீமேக்கு..

"இன்பமே.. உந்தன் பேர் பெண்மையோ…"

டேய் இது பழைய எம்.ஜி.யார் படம் இததான் ரீமிக்ஸ்ன்னு  அவங்களே சொல்லிட்டாங்களே..

உண்மையிலேயே இது புதுப்படம்தாண்டா சொன்னா நம்புடா.. தலைவரோட விக் வித்தியாசமா தெரியல?

இந்த மாதிரி பழைய படத்து கதைய வச்சுகிட்டு இன்னொரு தடவ   ஏமாத்துனன்னு  வை.. மரியாதை கெட்ரும்      

என் குறிப்பு 1: இந்த படத்த பத்தி நிறைய பேசலாம்னு plan. ஆனா இதுக்கு மேல அவமானப் பட நான் தயாரில்லை. :P
என் குறிப்பு 2: நண்பர்களோட கூட்டமாய்ப் போய் பார்க்க ஏற்றது. ஜாலியா இரண்டரை மணி நேரம் வயிறு வலிக்க வலிக்க சிரிச்சுட்டு வரலாம். :lol:
என் குறிப்பு 3: படம்தான் இப்படி கொடுமைனா சில தம்பிகள் வருங்கால முதல்வர் வாழ்க.. அமெரிக்க்க ஜனாதிபதி வாழ்கன்னு கத்துனதுல ஏறுனதெல்லாம் சுத்தமா இறங்கிடுச்சு..  :( (ஏதாவாது உளறிட்டனோ?  )